விருதுநகர்
தொழிலாளி மர்மசாவு
|திருச்சுழி அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
காரியாபட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழச் சொரிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 44). தொழிலாளியான இவர் நரிக்குடி ஒன்றியம் உழுத்தி மடை ஊராட்சி உச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்த மல்லிகா என்பவரை திருமணம் செய்து உச்சனேந்தல் கிராமத்திலேயே குடியிருந்து வந்தார். இந்நிலையில் முனீஸ்வரன் உச்சனேந்தல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் மாடியில் இறந்து கிடப்பதாக முனீஸ்வரன் தாயார் இருளாயி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருளாயி உச்சனேந்தல் கிராமத்திற்கு வந்த போது இறந்து கிடந்த முனீஸ்வரன் அருகே விஷமருத்து பாட்டில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக இருளாயி கட்டனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கட்டனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனீஸ்வரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் ெகாலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.