< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
தொழிலாளி மர்மசாவு
|19 Sept 2023 12:15 AM IST
திண்டிவனம் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே நொளம்பூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் துரை (வயது 58) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள ஒருவருடைய நிலத்தில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துரையின் மகள் ஆதிலட்சுமி ஒலக்கூர் போலீசில் புகார் அளித்தார். அதில் எனது தந்தையின் சாவில் மர்மம் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறியிருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.