< Back
மாநில செய்திகள்
வாகனம் மோதி தொழிலாளி பலி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

வாகனம் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
25 March 2023 11:53 PM IST

வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

ஊசூர் ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 32), செங்கல்சூளை தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி மாலை வேலை முடிந்து நண்பரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று சிவநாதபுரத்தில் உள்ள வீட்டில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சிவநாதபுரம்-ஊசூர் சாலையில் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த முரளி சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த அரியூர் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரேகா வழக்குப்பதிந்து முரளி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன முரளிக்கு ராதிகா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்