< Back
மாநில செய்திகள்
கெடார் அருகே    வாகனம் மோதி தொழிலாளி பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

கெடார் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
19 Dec 2022 12:15 AM IST

கெடார் அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.


கெடார்,

விழுப்புரம் அருகே உள்ள உலகலாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 60). செங்கல் சூளை கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து ஊரான குண்டலப்புலியூருக்கு சென்று விட்டு மீண்டும் உலகலாம்பூண்டி நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். செஞ்சி-விழுப்புரம் சாலையில் அசோகபுரி அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குப்பன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்