< Back
மாநில செய்திகள்
வாகனம் மோதி தொழிலாளி பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாகனம் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
26 Oct 2022 2:59 AM IST

வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி முடுக்கு தெருவைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் ஆதிமூலம் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், முத்தரசி, ரம்யா என்ற இரு மகள்களும், கதிர்வேல் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியன்று மாலை சுமார் 7 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடை அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆதிமூலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சேரன்மாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்