< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
குள்ளஞ்சாவடி அருகேவாகனம் மோதி தொழிலாளி பலி
|15 Oct 2023 1:12 AM IST
குள்ளஞ்சாவடி அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
குள்ளஞ்சாவடி,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சிறுபாலையூர் காந்திநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தண்டபாணி மகன் இளையராஜா (வயது 27). கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் குள்ளஞ்சாவடி பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார். குள்ளஞ்சாவடி அடுத்த ஆலப்பாக்கம் மெயின் ரோடு பள்ளி நீரோடை அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இளையராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி சத்யா கொடுத்த புகாாின் பேரில் குள்ளஞ்சாவடிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.