< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
வாகனம் மோதி தொழிலாளி பலி
|5 Aug 2023 9:48 PM IST
வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 58). கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரத்துடன் (64) பழனியில் இருந்து பாலசமுத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாலசமுத்திரம் மதுபான கடை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். பழனி தாலுகா போலீசார் அவர்களை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் பரிதாபமாக இறந்தார். சோமசுந்தரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.