< Back
மாநில செய்திகள்
டிராக்டர் மோதி தொழிலாளி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

டிராக்டர் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
11 Jun 2023 2:12 PM IST

பொன்னேரி அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பரிக்கப்பட்டு கிராமம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று அதே பகுதியை சேர்ந்த சிவநாகேஸ்வரராவ் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரத்தையா (வயது 45) ஆகிய 2 பேரும் வேலை செய்து வந்தனர்.

விவசாய நிலத்தை சிவநாகேஸ்வரராவ் டிராக்டர் கொண்டு உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் ரத்தையா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் ரத்தையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்