< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
9 Oct 2023 1:15 AM IST

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று திண்டுக்கல் நத்தம் சாலை சிறுமலை பிரிவு பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சக்திவேல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சக்திவேல் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்