< Back
மாநில செய்திகள்
ஊத்தங்கரை அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஊத்தங்கரை அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
19 July 2023 6:45 PM GMT

ஊத்தங்கரை அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை தாலுகா கெங்கபிராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது49). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஊத்தங்கரை- திருப்பத்தூர் சாலையில் உப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பக்கமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அண்ணாதுரை படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்