< Back
மாநில செய்திகள்
காசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பலி
சென்னை
மாநில செய்திகள்

காசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
29 May 2023 10:29 AM IST

காசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை தேசிங்கு நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவர், நேற்று முன்தினம் இரவு காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரைக்கு சென்றார். அப்போது கல்லில் கால் வழுக்கியதால் கடலில் தவறி விழுந்து விட்டார். இதில் ராட்சத அலையில் சிக்கிய முருகானந்தம், கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை அவரது உடல் கடலில் மிதப்பதை கண்ட பொதுமக்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்