< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
|1 July 2022 12:01 AM IST
கீரனூர் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
கீரனூர் அருகே வடக்குபட்டியை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 39). தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கீரனூர் வந்து விட்டு திருச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நல்லசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையறிந்த கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்லசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் அரசு பஸ் டிரைவர் கரியாபட்டியை சேர்ந்த அழகர் (55) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.