< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கன்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பலி
|4 Dec 2022 3:37 PM IST
கன்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பலியானார்.
மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு வ.உ.சி தெருவில் வசிப்பவர் மோகனசுந்தரம் (வயது 30). இவர் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் காட்டுப்பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வடசென்னை அனல்மின் நிலையம் எதிரே உள்ள ரவுண்டானாவை கடந்த நிலையில் கண்டெய்னர் லாரி மோதி மோகனசுந்தரம் கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திலே சென்று பலியான தொழிலாளி மோகனசுந்தரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.