< Back
மாநில செய்திகள்
நெல் அறுவடை எந்திரம் மோதி தொழிலாளி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

நெல் அறுவடை எந்திரம் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
21 Sept 2022 2:42 PM IST

நெல் அறுவடை எந்திரம் மோதி தொழிலாளி பலியானார்.

திருவள்ளூரை அடுத்த சின்ன மண்டலி கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 66). கூலித்தொழிலாளி. திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குடிசை கிராமம் செஞ்சி மதுரா கண்டிகை பகுதியில் உள்ள கருணாகரன் என்பவரது விவசாய நிலத்தில் வயலில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். பாலு டிராக்டர் மீது அமர்ந்து இருந்தார்.

அப்போது வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்த நெல் அறுவடை எந்திரம் பின்னோக்கி வரும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து நெல் அறுவை எந்திரத்தை ஒட்டி வந்த திருவாரூர் மாவட்டம் விளங்கிமான் பகுதியை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவரான ராம்குமார் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்