< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி
|11 Sept 2023 12:14 AM IST
சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வடக்கு புதுக்குடி சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கோட்டைப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி நோக்கி சென்ற சரக்கு வேன் சுப்பிரமணியன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சரக்கு வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.