< Back
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
24 Jun 2023 8:12 PM IST

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் சென்னை (வயது 45) கூலித்தொழிலாளி. நேற்று இவர், பரளியை சேர்ந்த தனது நண்பர் அஜித்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நத்தத்துக்கு வந்தார். அஜித்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால், சென்னை அமர்ந்திருந்தார்.

நத்தம் அருகே மதுரை சாலையில், முடக்கு சாலை பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சென்னை சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய அஜித்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சென்னையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்