< Back
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி சாவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கார் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
12 Jun 2023 12:15 AM IST

முக்காணியில் கார் மோதி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

ஆறுமுகநேரி:

முக்காணி முதலியார் தெருவை சோ்ந்தவர் முருகன் (வயது 50). இவர் ஆத்தூரில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி சுசிலா என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் முருகன் தனது வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டு பஜாரில் பொருட்கள் வாங்குவதற்காக நடந்து வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் முருகன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்