தேனி
கார் மோதி தொழிலாளி சாவு
|உத்தமபாளையம் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.
தேவாரம் அருகே உள்ள தே.ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் சின்னமருதுபாண்டி (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது நண்பர் ரோட்டுப்பட்டியை சேர்ந்த ராசா (34). நேற்று முன்தினம் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கம்பத்தில் இருந்து தேவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி சாலையில் அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சின்னமருதுபாண்டி, ராசா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னமருதுபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் சாந்தினிகாட்டை சேர்ந்த ஜான்சி தேவி (51) என்பவரை கைது செய்தனர்.