< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி பலி
|10 May 2023 12:15 AM IST
கொல்லங்கோட்டில் கார் மோதி தொழிலாளி பலி
கொல்லங்கோடு,
கேரள மாநிலம் பொழியூர் காவுவிளை புத்தன்வீட்டைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 55), மீன்பிடி தொழிலாளி. இவருடைய மகன் விஷாக் (28), கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கொல்லங்கோட்டில் இருந்து மேடவிளாகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஷாக் ஓட்டி சென்றார்.
மேடவிளாகம் பகுதியில் வந்த ேபாது எதிரே வந்த கேரள பதிவெண் கொண்ட கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை-மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஸ்டீபன் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.