< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி பலி
|28 April 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலியானாா்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது 35). தொழிலாளி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பாதூர் கிராமத்தில் இருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து உளுந்தூர்பேட்டை நோக்கி செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார், எதிர்பாராதவிதமாக குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.