< Back
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி சாவு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கார் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
11 Dec 2022 6:54 PM IST

போளூர் அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

போளூர்

போளூர் அருகே ஓகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40), கூலி தொழிலாளி. இவர் கடந்த 7-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நைனாவரம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

செங்குணம் கிராமம் அருகே சென்றபோது திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாரிமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவர் விளாப்பாக்கத்தை சேர்ந்த நடராஜன் என்பவரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்