< Back
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி பலி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
20 Sept 2022 12:15 AM IST

வேதாரண்யம் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி வடக்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயகோபால் (வயது55). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று மாவடி வாய்க்கால் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி சென்ற கார், எதிர்பாராதவிதமாக ஜெயகோபால் மீது மோதி விட்ட நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ஜெயகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜெயகோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்