< Back
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி சாவு
விழுப்புரம்
மாநில செய்திகள்

கார் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

கார் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் சுரேஷ் (வயது 40). தொழிலாளி. நேற்று காலை அரசூர் கூட்ரோடு பகுதிக்கு வந்த சுரேஷ், பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்