< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி பலி
|14 Oct 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலியானாா்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் மன்னார்குடி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா(வயது 40). தொழிலாளியான இவர், சம்பவத்தன்று அந்த ஊரில் உள்ள ரேணுகா மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார், அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது அண்ணன் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.