< Back
மாநில செய்திகள்
விபத்தில் ெதாழிலாளி பலி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விபத்தில் ெதாழிலாளி பலி

தினத்தந்தி
|
26 Jun 2022 12:09 AM IST

விபத்தில் ெதாழிலாளி உயிரிழந்தார்.

கமுதி

கமுதி-கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 52). தொழிலாளி. இவர் கமுதி-கோட்டைமேடு சாலையில் உள்ள குண்டாத்திவீரன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பெருநாழி ஊரைச் சேர்ந்த கவியரசன்(30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த இருவாகனங்களும் மோதியதில், கீழே விழுந்த வீரணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கவியரசன் அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்