< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னையில் மரக்கிளை விழுந்து தொழிலாளி பலி
|9 Feb 2023 12:54 PM IST
சென்னையில் மரக்கிளை விழுந்து தொழிலாளி பலியானார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). இவர் அடையாறு பகுதியிலுள்ள கிரீன் வேஸ் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் தோட்ட வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று தோட்ட வேலை செய்து கொண்டிருந்தபோது அருகே இருந்த ஆல மரத்தின் கிளை ஒன்று முறிந்து துரை ராஜ் மேல் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.