< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
|28 July 2023 1:15 AM IST
திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.
திண்டுக்கல்லை அடுத்த முள்ளிபாடி அருகே உள்ள செட்டியபட்டியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக, திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் ரெண்டல்லைபாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி சேசுராஜ் (வயது 46) என்று தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு அவர் இறந்துள்ளார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.