திருவள்ளூர்
மீஞ்சூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
|மீஞ்சூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
மீஞ்சூர் அருகே மேலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சாந்தகுமார் (வயது 32). இவர் வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 27-ந்தேதி அன்று பட்டமந்திரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது மேலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த விக்னேஷ் என்கி்ற விக்கி (25) சாந்தகுமாரிடம் பணம் கேட்டதாகவும் பணம் கொடுக்காததால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி அருகே இருந்த கல்லால் சாந்தகுமாரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. இது குறித்து அவரது தந்தை மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்கியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாந்தகுமார் நேற்று பரிதாபமாக பலியானார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.