< Back
மாநில செய்திகள்
திருட்டு வழக்கில் தொழிலாளிக்கு ஜெயில்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

திருட்டு வழக்கில் தொழிலாளிக்கு ஜெயில்

தினத்தந்தி
|
29 Aug 2023 12:15 AM IST

திருட்டு வழக்கில் தொழிலாளிக்கு ஜெயில்

தொண்டி,

மதுரை நாகமலைபுதுக்கோட்டை சின்னகண்ணு நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சத்யகுமார். தொழிலாளி. இவர் மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு விசாரணை திருவாடானை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பிரசாத், சத்யகுமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறும்பட்சத்தில் மேலும் 2 மாத சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து சத்யகுமார், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்