< Back
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி படுகாயம்
அரியலூர்
மாநில செய்திகள்

கார் மோதி தொழிலாளி படுகாயம்

தினத்தந்தி
|
26 Dec 2022 12:30 AM IST

கார் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே குமிழியம் கிராமத்தை சேர்ந்தவர் சபரிராஜன் (வயது 22). இவரும், தொழிலாளியான இவரது மாமா குமாரும்(47) உடையார்பாளையம் வாரச்சந்தைக்கு காய்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது வாரச்சந்தை எதிரே உள்ள திருச்சி-சிதம்பரம் சாலையில் ஓரமாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த கார் குமார் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் ஜெயங்கொண்டம் அருகே குஞ்சிதபாத கிராமத்தை சேர்ந்த ஆசைத் தம்பி மகன் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்