கோயம்புத்தூர்
காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
|வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரை வனப்பகுதியில் இருந்து தொட்டில் கட்டி சாலைக்கு தூங்கி வந்தனர்.
காட்டெருமை தாக்கியது
வால்பாறை அருகே சங்கரன்குடி மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் மினுக்கண் (வயது 52). தொழிலாளி. இவர் நேற்று காைல கெஜமுடி டனல் கூடுதுறை ஆற்று பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். பின்னர் அங்கிருந்து மதியம் 12.15 மணியளவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை ஒன்று திடீரென மினுக்கணை முட்டி தாக்கிவிட்டு சென்றது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
தொட்டில் கட்டி தூங்கி வந்தனர்
இதை கண்ட சக மலைக்கிராம மக்கள் அவரை கெஜமுடி எஸ்டேட் சாலை வரை தொட்டில் கட்டி தூக்கி வந்தனர். இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தொழிலாளியை காட்டெருமை தாக்கியது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.