< Back
மாநில செய்திகள்
பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
4 May 2023 12:03 AM IST

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு முக்கடல் காஞ்சிராங்குளத்தை சேர்ந்தவர் ரசாலம் (வயது35), கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் அருகே ஒரு குளம் உள்ளது. நேற்று மதியம் ரசாலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தடுமாறி குளத்தில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்