< Back
மாநில செய்திகள்
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
வேலூர்
மாநில செய்திகள்

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
13 Dec 2022 7:06 PM IST

அணைக்கட்டு அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்து சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 48), தொழிலாளி. இவர், தனது நண்பர்களுடன் அணைக்கட்டு அருகே ஏரிபுதூர் பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்று உள்ளார். நண்பர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, குளத்தில் பிரகாஷ் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்