கன்னியாகுமரி
சிற்றார்-2 அணையில் மூழ்கி தொழிலாளி பலி
|அருமனை அருகே சிற்றார்-2 அணையில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
அருமனை:
அருமனை அருகே சிற்றார்-2 அணையில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
அருமனை அருகே உள்ள பத்துகாணி முல்லப்புகாணி பகுதியை சேர்ந்தவர் ரெகு (வயது50), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் ரெகு நேற்று தனது 2 நண்பர்களுடன் பேணு பகுதியில் சிற்றார்-2 அணையின் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்றார். அங்கு வலையை வீசி மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு நண்பர் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். ரெகு தண்ணீரில் வீசப்பட்டிருந்த வலையில் மீன்கள் சிக்கி உள்ளதா? என சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கினார்.
பிணமாக மீட்பு
இதைபார்த்து அருகில் நின்று கொண்டிருந்த நண்பர் அதிர்ச்சி அடைந்தார். அவர் தண்ணீரில் இறங்கி ரெகுவை ேதடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆறுகாணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் ரெகுவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின் ரெகு பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுெதாடர்பாக ஆறுகாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அணையில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.