< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
பாம்பு கடித்து தொழிலாளி சாவு
|28 July 2022 6:46 PM IST
களம்பூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி சாவு
ஆரணி
களம்பூர் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (வயது 48).
விவசாய கூலி தொழிலாளியான இவர், கடந்த 13-ந் தேதி நரியம்பேட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் உரம் போடும் பணிக்குச் சென்று இருந்தார்.
அப்போது அவரை பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தினகரனை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து களம்பூர் போலீசில் மகன் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.