< Back
மாநில செய்திகள்
சிப்ஸ் கம்பெனியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
சென்னை
மாநில செய்திகள்

சிப்ஸ் கம்பெனியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
2 April 2023 2:00 PM IST

திருவொற்றியூரில் சிப்ஸ் கம்பெனியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

திருவொற்றியூர் ஒத்தவாடை தெருவில் தனியாருக்கு சொந்தமான உருளை கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ரவி (வயது 21) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர், தற்போது திருவொற்றியூர் ராமசாமி நகரில் தங்கி, வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று உருளை கிழங்கு சிப்ஸ் போடுவதற்காக ரவி, எந்திரத்தை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்