< Back
மாநில செய்திகள்
சாலை விபத்தில் சிக்கி தொழிலாளி சாவு
கரூர்
மாநில செய்திகள்

சாலை விபத்தில் சிக்கி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
25 Oct 2023 11:12 PM IST

சாலை விபத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

க.பரமத்தி சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் கரூரில் தங்கி இருந்து ஆர்.ஓ. தண்ணீர் வினியோகம் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று க.பரமத்தி இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, குளத்துப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே குளத்துபாளையத்தைச் சேர்ந்த குப்புசாமி (77) என்பவர் ஓட்டி மோட்டார் சைக்கிளும், சுரேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டது.இதையடுத்து படுகாயம் அடைந்த 2 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுரேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சுரேசின் மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் க.பரமத்தி இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்