< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
தென்காசி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
30 April 2023 12:15 AM IST

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 45). கூலி தொழிலாளி. கீழச்சுரண்டையை சேர்ந்தவர் தங்கசாமி (59). இவர்கள் இருவரும் ஆலங்குளம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சுரண்டைக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜன் ஓட்டினார். முத்துகிருஷ்ணபேரி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள், சுரண்டையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற லாரி மீது மோதியது. இதில் ராஜன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தங்கசாமிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கசாமியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்