< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
17 Oct 2022 12:15 AM IST

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே பழைய காயலை அடுத்துள்ள கோவங்காடு கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கோபால் மகன் முத்துக்குமார் (வயது 47). தொழிலாளி. அவரது உறவினர் முனியசாமி. இவர்கள் இருவரும் நேற்று இறைச்சி வாங்குவதற்காக ஆத்தூரை நோக்கி தனித்தனி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றனர். மஞ்சள்நீர் காயல் அருகே சென்றபோது முத்துக்குமாரின் நண்பரான மாடசாமி மகன் வேல்முருகன் (37) என்பவர் முத்துக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் ஏறினார். மோட்டார் சைக்கிளை வேல்முருகன் ஓட்டினார். பின்னால் முத்துக்குமார் அமர்ந்திருந்தார்.

முக்காணிக்கு வடபுறம் உள்ள கியாஸ் பல்க் அருகே சென்றபோது வேல்முருகன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதனால் பின்னால் அமர்ந்திருந்த முத்துக்குமார் கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முத்துக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக முனியசாமி கொடுத்த புகாரின் பேரில், வேகமாகவும் அஜாக்கிரதையாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக வேல்முருகன் மீது ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்