< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

தினத்தந்தி
|
31 July 2022 9:31 PM IST

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 55). ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள இரும்பு கடையில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் மாதனூரில் இருந்து வேலூர் நோக்கி சர்வீஸ் ரோடில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கருணாகரன் சாலையில் இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் கருணாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்