< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
வேலூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

தினத்தந்தி
|
18 July 2022 11:52 PM IST

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

குடியாத்தம் அருகே கல்மடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, (வயது 55), கூலித் தொழிலாளி. இவர் வேலை சம்பந்தமாக குடியாத்தம் வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். காக்காதோப்பு கிராமம் அருகே செல்லும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ரவி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் பலத்த காயம் அடைந்தனர். படுகாயமடைந்த ரவி குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக பலியானார்.

இதேபோல் ரவியின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (35) குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்