< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
|16 Aug 2022 12:53 PM IST
பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கதிர்வேல் (வயது 55). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் நேற்று கிராமத்தில் பணிக்காக வயலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வரப்பின் மீது அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.