< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
|1 Aug 2022 6:50 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருக்கழுக்குன்றம்,
கட்டிட தொழிலாளி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பூலியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கானக்கோயில்பேட்டை பகுதியில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி சாவு
இந்த நிலையில் வீட்டின் மேல் பகுதி அருகாமையில் இருந்த மின்சார வயர் எதிர்பாராதவிதாக சுரேஷ் கையில் இருந்த இரும்பு கம்பி மீது பட்டது.
இதில் சுரேஷ் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.