< Back
மாநில செய்திகள்
பெரியபாளையம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பெரியபாளையம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
22 Oct 2022 3:31 PM IST

பெரியபாளையம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி ஆனார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் பெரியகாலனியில் வசித்து வந்தவர் பாஸ்கர் (வயது 49). இவர் காரனோடையில் உள்ள அப்பள கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இவர் குளித்து விட்டு ஈரதுணியை இரும்பு கம்பியில் காய வைத்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் பாஸ்கர் தூக்கி வீசப்பட்டார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மஞ்சஞ்காரனையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் பலியான பாஸ்கர் உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்