< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
|22 Aug 2023 1:00 AM IST
திண்டுக்கல்லில் மிக்சியை பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவா் வின்சென்ட் பாபு. அவருடைய மகன் ஆகாஷ் அந்தோணி (வயது 24). வெல்டிங் தொழிலாளி. இவருடைய வீட்டில் பயன்படுத்தி வந்த மிக்சி திடீரென பழுதாகி விட்டது. இதனையடுத்து அவர் நேற்று மிக்சியை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் அந்தோணியை மீட்டு, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.