< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
16 Aug 2023 1:45 AM IST

வத்தலக்குண்டு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.

வத்தலக்குண்டு அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் தவமணி (வயது 48). தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை தவமணி, பக்கத்து கிராமமான குளிப்பட்டியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி விட்டு, இறங்கி கொண்டிருந்தார். அப்போது தென்னை மரத்தில் இருந்து மட்டை ஒன்று கீழே விழுந்தது. அந்த மட்டை மரத்தின் அருகில் இருந்த மின்கம்பிகள் மீது விழுந்தது. மட்டையின் ஒருபகுதி மின்கம்பியிலும், மற்றொரு பகுதி தென்னை மரத்தில் இருந்து இறங்கி கொண்டிருந்த தவமணி மீதும் பட்டது. இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்