< Back
மாநில செய்திகள்
மருந்துக்கடையில் காய்ச்சலுக்காக ஊசி போட்டுக்கொண்ட தொழிலாளி சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மருந்துக்கடையில் காய்ச்சலுக்காக ஊசி போட்டுக்கொண்ட தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
9 July 2023 6:45 PM GMT

சின்னசேலம் அருகே மருந்துக்கடையில் காய்ச்சலுக்காக ஊசி போட்டுக்கொண்ட தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

தொழிலாளிக்கு காய்ச்சல்

சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பாயிரம் மகன் பாஸ்கர்(வயது 38) தொழிலாளி. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் காலை ஊனத்தூரில் உள்ள மருந்து கடைக்கு சென்றார்.

அப்போது அங்கு வேலை பார்த்து வரும் அசோக்குமார் என்பவர் பாஸ்கரை பரிசோதனை செய்து அவருக்கு காய்ச்சலுக்கு ஊசி போட்டதாகவும், 2 வேளைக்கு மாத்திரை சாப்பிட கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

வாயில் நுரை தள்ளி சாவு

இதன் பின்னர் வீட்டுக்கு சென்ற பாஸ்கர் உணவு சாப்பிட்டு விட்டு மாத்திரையையும் தின்றார். சிறிது நேரத்தில் அவரது கை, கால்கள் இழுக்கப்பட்ட நிலையில் வாயில் நுரை தள்ளியது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் பாஸ்கரை சிகிச்சைக்காக சின்னசேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பாஸ்கரின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகார் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்துக் கடையில் காய்ச்சலுக்காக ஊசி போட்டுக்காண்டு மாத்திரையை சாப்பிட்டதால் பாஸ்கர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் எற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்