< Back
மாநில செய்திகள்
மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
9 Aug 2022 9:40 PM IST

செங்கம் அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.

செங்கம்

செங்கம் அருகே உள்ள பனைஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் காசிவேல் (வயது 45). கூலித்தொழிலாளி.

இவர் இன்று செங்கம் -போளூர் நெடுஞ்சாலையில் நந்திமங்கலம் கூட்ரோடு அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் மொபட் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த காசிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காசிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்