< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
தண்டையார்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
|22 Aug 2023 7:15 PM IST
தண்டையார்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சென்னை தண்டையார்பேட்டை நாவலன் நகரைச் சேர்ந்தவர் வர்ணமூர்த்தி(வயது 58). கூலி தொழிலாளியான இவர், மீன்பாடி வண்டி ஓட்டி வந்தார். நேற்று காலை அதே பகுதியில் உள்ள கைலாசம் தெருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி வர்ணமூர்த்தி மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த வர்ணமூர்த்தி, லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருவெற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.