< Back
மாநில செய்திகள்
குளிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

குளிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
14 Jun 2022 10:11 PM IST

திருவண்ணாமலை அருகே குளிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

கலசபாக்கம்

செங்கம் தாலுகா மஷார் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 55), கூலி தொழிலாளி.

இவர் நேற்று மாலை மஷார் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். பின்னர் இரவு முழுவதும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

இதனால் இன்று காலை திருவேங்கடம் வழக்கமாக குளிக்கும் கிணற்றுக்கு அருகில் உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கிணற்றின் அருகில் அவரது துணிகள் மட்டும் இருந்தன. திருவேங்கடத்துக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உள்ளாரா என்று சந்தேகத்தின் பேரில் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் வந்து கிணற்றில் தேடி திருவேங்கடத்தின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்